திமுகவுக்கு இது எதிர்பார்த்த வெற்றிதான், எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போயிருக்கிறது. எதிர்காலத்தில் எடப்பாடி முதல்வராகும் வாய்ப்புகள் இன்றே துளிர்த்திருக்கிறது. அதற்கு ஸ்டாலினும் தன் பங்கிற்கு உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பாரென்றே தோணுகிறது. இனி பாஜக தன் போக்கில் தமிழகத்தில் தலைவிரித்தாடும் என எதிர்பார்க்கிறேன்.ஆடித் தீர்க்கட்டும்....
சீனியர், ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல் தகுதியான, கொஞ்சம் நேர்மையான ஆட்களை மந்திரி பதவிகளுக்கு நியமித்தால் ஸ்டாலினை வரலாறு வாழ்த்தும். மாறாக கிட்சன் கேபினட்டை ஆட்சி நடத்தவிட்டால் மன்னார்குடி குடும்பமே தேவலையென அதே வரலாறு பழிக்கும்.
இப்போது எல்லாம் அவர் கையில்தான் இருக்கிறது.
வாழ்த்துக்கள் ஸ்டாலின்.