Skip to main content

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்!

நான் பார்த்தவரையில், பழகியவரையில்....பகவான் கிருஷ்ணரை பிடிக்கிறவர்களுக்கு, இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறவரையும் பிடிக்கிறது. சிலர் நெக்குருகிப் போவதை பார்த்திருக்கிறேன். எனக்கு எப்போதும் அவரை பிடித்ததே இல்லை. அந்த வகையில் கிருஷ்ணரும் எனக்கு தூரம்தான்.

புள்ளி விலகி நின்று யோசித்தால், இந்த இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. குஜராத்திகள் என்பதில் துவங்கி, தாங்கள் நினைத்தவற்றை சாதிக்க உலகில் உள்ள அத்தனை அதர்ம வழிகளையும் பயன்படுத்துகிறவர்கள். 

நேர்மையற்றவைகளை தர்மம் என சப்பைகட்டு கட்டுவதில் இருவருமே கை தேர்ந்தவர்கள். அவற்றை பெரும்பான்மையினர் நம்புவதும், வழிபடுவதும் என் வரையில் சலிப்பூட்டும் நிதர்சனங்கள். இருவருக்குமே கர்ணன்களை பிடிப்பதில்லை. நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்....தேரோட்டுவதாகட்டும், தேசத்தை விற்பதாகட்டும் நண்பர்களுக்கு இவர்கள் செய்யும் கைமாறுகள் நிகரில்லாதவை.

தாய்மார்களை கொண்டாடும் இவர்களுக்கு, மனைவி என்பவள் எப்போதும் இரண்டாம்பட்சம்தான். ராதைகளைப் பற்றி இதற்கு மேல் பேசினால் களேபரமாகி விடுமென்பதால் இந்தமட்டோடு இதிலிருந்து விலகிப் போவோம்.

நிர்வாகத் திறமை என்று வரும்போது, இவர்களைப் பொறுத்தவரையில் அதொரு மாயத்தோற்றம். "இருக்கும் ஆனால் இருக்காது" ரகம்தான். ஆனாலும் இன்றளவும் உலகின் மிகச்சிறந்த "ஈவண்ட் மேனேஜர்ஸ்" இவர்கள்தான்.வாயாலே வடை சுடுகிறவர்கள் என்று கேலி பேசுவதை விட, வசீகர பேச்சுக்காரர்கள் என ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கிருஷ்ணரின் கடைசி நாட்கள் அவ்வையின் "சூதும் வாதும் வேதனை செய்யும்" என்பதையொட்டியே இருந்தது.  அதனால் இவராவது, இனியாவது இது நாள் வரையிலான தவறுகளை எல்லாம் திருத்திக்கொள்வாரென நம்புவோம். அதற்காக எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுவோம். 


இனிய பவளவிழா பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். 🙏


Popular posts from this blog

மதங்கள் என்ன செய்யும் !

மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை  இதைத்தான் செய்யும்.  சொல்லிவைத்தாற் போல அவை பிணங்களின் மீதே உயிர்த்தெழும். பிரிவினைகளில் உரம் பெறும். வெறுப்புகளே  அதன் வீரியம். ரத்தம் குடித்தே உயிர் வாழும். பெண்களை  போற்றாது, ஆனால் அங்கிருக்கும் பெண்கள் வரிந்து கட்டிக்க கொண்டு அதை போற்றுவார்கள். ஆனால்..... இந்த  மதங்களின் "அசட்டு" கடவுள்கள் மாய்ந்து மாய்ந்து அன்பை, சமத்துவத்தை, அறத்தை, அஹிம்சையை போதித்திருப்பார்கள் . அவற்றை இந்த மதங்கள் கண்டுகொள்வதும்  இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் இந்த கடவுளர்களால் இன்று வரை மதங்களை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனாலேதான் அசட்டு கடவுள்கள் என்கிறேன். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்  எந்த ஒரு கடவுளும் மதச்சண்டைகளில் தன்னுடைய ஆட்களை  காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அதாவது மதங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலத்தான் எல்லா கடவுளர்களும் இருக்கிறார்கள். இதை ஏனோ இந்த ஆவேச மதப்ரியர்கள்(எத்தனை நாளைக்குத்தான் மதவெறியர்கள் என்று எழுதுவது) புரிந்து கொள்வதில்லை.  சரி, இந்த கடவுளர்கள் தங்களுக்குள்ளாவது சண...

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன். தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான்.  அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தத...

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012.  மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான்.  அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை. புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிற...