Skip to main content

தமிழகமும், மதங்களும்....

மதம் என்கிற ஒன்று தமிழகத்தில் ஐந்தாம் நூற்றாண்டில்தான் நுழைந்திருக்கிறது. அதுவும் சமண,பௌத்த மதங்கள்தான் தமிழகத்தின் முதல் மதங்கள். அதன் பிறகு கொஞ்சம் லேட்டாக அதாவது ஏழாம் நூற்றாண்டு வாக்கில் சைவ மதமும், அதைத் தொடர்ந்து வைணவமும்  தமிழகத்தில் நுழைந்திருக்கின்றன.

ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகத்தின் தெய்வஙக்ளாக வேலன் அல்லது முருகன், மாலன் என்கிற மாயோனை தங்கள் தெய்வமாகவும் வணங்கியிருந்தனர்.  பிடாரி, காடுகிழாள்,கொற்றவை போன்ற பெண் தெய்வ வழிபாடுகளும் இருந்திருக்கின்றன. இவை எல்லாமே நிலம் சார்ந்த தொன்மகுடி தெய்வங்கள். இவற்றிற்கென கோவில் குளங்கள் என கட்டமைப்புகள் எதுவும் இருக்கவில்லை. பெரும்பாலும் மரத்தடியில்தான் அமர்த்தியிருந்தனர்.

தமிழகத்தில் மதம் என்பது கட்டமைப்புடன் கூடிய ஸ்தாபனமாக உருவெடுத்தது களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில்தான். கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு காலம் தமிழகத்தின் மையப்பகுதியை இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தஞ்சைக்கும், திருச்சிக்கும் இடைப்பட்ட பகுதி களப்பிரர்களின் ஆளுகைக்குள் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. தஞ்சைக்கு அருகில் இப்போதும் உள்ள செந்தலை என்னும் ஊரே களப்பிரர்களின் தலைநகராக இருந்திருக்கிறது.

இவர்கள் ஆட்சிக்காலத்தில் சமண மதம் தமிழகமெங்கும் தழைத்தோங்கி இருந்தது. பின்னாளில் சோழ மன்னர்களின் ஆதரவோடு தலையெடுத்த சைவ மதத்தின் 63 நாயன்மார்களில் மதுரைக்குத் தெற்கே ஒருவர் கூட இல்லை என்பதில் இருந்தே சமணமதம் பாண்டியர்களின் நிலப்பரப்பில் எத்தனை புகழோடு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

சைவ மதம் கூட கர்நாடகத்தில் இருந்துதான் தமிழகத்திற்குள் நுழைந்தது. அதுவும் ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகே வந்தது. ஆந்திர,கர்நாடக எல்லையில் இருந்து வந்தவர்களான பல்லவ மன்னர்களினால் களப்பிரர் காலம் முடிவுக்கு வந்து பல்லவர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலைபெற்றது.மகேந்திரவர்மன் காலத்தில்தான் தமிழகத்தில் சைவமதம் துளிர்விட ஆரம்பித்தது.இந்த காலகட்டத்தில் கர்நாடகத்திலிருந்து வந்த வீரசைவர்கள் தமிழகத்தில் சைவம் பரவ காரணமாயிருந்தனர்.

இந்த வீரசைவமே பின்னாளில் தமிழ் மண்ணோடும் மரபோடும் இனைந்து தமிழ் சைவமாயிற்று. பின்னாளில் பல்லவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து சோழர்கள் தலையெடுத்த போது இந்த தமிழ் சைவம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, காஷ்மீரத்தில் இருந்து வந்த பிராமணர்கள் முன்வைத்த பாசுபத சைவமே தழைத்தோங்கியது.

வடமொழி பின்புலத்தோடு உள்நுழைந்த பாசுபத சைவர்கள் சடங்கு, சம்பிரதாயங்கள்,பரிகாரங்கள் என மன்னர்களின் அணுக்கமானவர்களாகிப் போனார்கள். ஆட்சி,அதிகாரங்களை நிர்வகிக்கும் அளவுக்கும் அவர்களின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. குறிப்பாக ராஜராஜசோழன் காலத்தில்தான் இவர்கள் பெற்ற முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது . சமஸ்கிருதம் தமிழ் கல்வெட்டுகளில் இடம் பெற்றதும் இந்த காலகட்டத்தில்தான்.

நாலுவேதங்களைப் படித்தவர்கள் என்பதால் பாசுபத சைவர்கள்(பிராமணர்கள்) “சதுர்வேதி” என அழைத்தனர். இந்த சதுர்வேதிகளுக்காக அவர்களின் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக  சோழர்களின் காலத்தில் ஊர்கள் தானமாக வழங்கப்பட்டன. இவை சதுர்வேதி மங்கலங்கள் எனப்பட்டது. இவை வளமான விளைநிலங்கள். இப்படியாக வட இந்திய அதாவது காஷ்மிரத்து பிராமணர்கள் தமிழகத்தில் செழித்து வளர்ந்தனர்.

பாசுபத சைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்களை தமிழர்களாகவே மாற்றிக்கொண்டனர். ராஜராஜனின் ராஜகுருவான ஈசான்ய பண்டிதர் காஷ்மிரத்து பிராமணர்.  உள்ளூரில் ஏற்கனவே பரவியிருந்த தமிழ்சைவர்களை அழித்தொழிக்கும் வேலையை இவர்கள் செய்ய ஆரம்பித்தனர். தமிழ் சைவர்களின் கையில் இருந்த கோவில்கள், மடங்கள் எல்லாம் பாசுபத சைவர்களின் ஆதிக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் கொண்டு வரப்பட்டன.

சமண, பௌத்த வழிபாட்டுத் தலங்களோடு சேர்த்து தமிழ் சைவர்களின் மடங்கள், கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கோவில்கள் பாசுபத சைவ ஆகமத்தின் படி கட்டப்பட்டன. இதனை வரலாறு “குகையிடிகலகம்” என பதிவு செய்கிறது. தஞ்சை பெரிய கோவில் கூட பாசுபத சைவ ஆகமத்தின் படிதான் கட்டப்பட்டிருக்கிறது. இப்படியாக தமிழகத்திற்குள் ஒரு கலாச்சார படையெடுப்பையே அனுமதித்த வகையில் ராஜராஜனை தமிழகவரலாறு மன்னிக்காது.

புராணங்கள், தல வரலாறுகள் என்கிற பெயரில் உள்ளூர் தெய்வங்களை சைவ மதத்தோடு இணைத்த கைங்கர்யமும் இந்த காலகட்டத்தில்தான் நடந்தேறியது. முருகனும், விநாயகரும் சிவனின் பிள்ளைகளாகவும், மாயோன் என்கிற திருமால் சிவனின் மைத்துனராகவும் ஆக்கப்பட்டு அதற்கேற்ற கதைகள் கட்டப்பட்டன.

வைணவ மதமும் பல்லவர்களின் காலத்தில்தான் தமிழகத்தில் நுழைந்தது. சோழ மன்னர்களிடம் சைவர்களுக்கு கிடைத்த ஆதரவு வைணவர்களுக்கு கிடைக்கவில்லை. மிக கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் வைணவம் தமிழகத்தில் பிழைத்துக் கிடந்தது. பின்னாளில் சேர, பாண்டிய, நாயக்க மன்னர்களின் காலத்தில்தான் பெரும்பான்மையான வைணவதலங்கள் சிறப்படைந்தன.

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இஸ்லாமியர்கள் குதிரைவியாபாரிகளாக தமிழகத்தில் நுழைந்தனர். பாண்டிய, சோழ மன்னர்கள் இவர்களுக்கு ஆதரவளித்தனர். குடியிருக்க, வழிபாட்டுத்தலம் அமைத்துக் கொள்ள இடம் ஒதுக்கப்பட்டன. அப்படி சோழர்களால் உறையூரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இன்றும் இருந்துவருகிறது. உறையுர் இன்றைய திருச்சி மாநகரத்தின் ஒருபகுதியாக இருக்கிறது.

கிருத்துவ மதம் சேர மன்னர்களின் மூலமாகத்தான் தமிழகத்தில் நுழைந்தது. ஒரு சேர மன்னன் கிருத்துவனாக இருந்ததாகக்கூட தகவல்கள் உண்டு.








Popular posts from this blog

மதங்கள் என்ன செய்யும் !

மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை  இதைத்தான் செய்யும்.  சொல்லிவைத்தாற் போல அவை பிணங்களின் மீதே உயிர்த்தெழும். பிரிவினைகளில் உரம் பெறும். வெறுப்புகளே  அதன் வீரியம். ரத்தம் குடித்தே உயிர் வாழும். பெண்களை  போற்றாது, ஆனால் அங்கிருக்கும் பெண்கள் வரிந்து கட்டிக்க கொண்டு அதை போற்றுவார்கள். ஆனால்..... இந்த  மதங்களின் "அசட்டு" கடவுள்கள் மாய்ந்து மாய்ந்து அன்பை, சமத்துவத்தை, அறத்தை, அஹிம்சையை போதித்திருப்பார்கள் . அவற்றை இந்த மதங்கள் கண்டுகொள்வதும்  இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் இந்த கடவுளர்களால் இன்று வரை மதங்களை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனாலேதான் அசட்டு கடவுள்கள் என்கிறேன். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்  எந்த ஒரு கடவுளும் மதச்சண்டைகளில் தன்னுடைய ஆட்களை  காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அதாவது மதங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலத்தான் எல்லா கடவுளர்களும் இருக்கிறார்கள். இதை ஏனோ இந்த ஆவேச மதப்ரியர்கள்(எத்தனை நாளைக்குத்தான் மதவெறியர்கள் என்று எழுதுவது) புரிந்து கொள்வதில்லை.  சரி, இந்த கடவுளர்கள் தங்களுக்குள்ளாவது சண...

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன். தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான்.  அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தத...

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012.  மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான்.  அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை. புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிற...