மகாகவி பாரதியாரின் எல்லா பாடல்களும் நமக்கு கிடைக்கவில்லை. அதிலும் ஒரு சில பாடல்களின் ஒரு பகுதியே நமக்குக் கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்த "தமிழ் சாதி" எனும் பாடலின் ஒருபகுதிதான் இது.
நல்லவை எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எவரிடமிருந்தாலும் அவற்றை அறிந்துணர்ந்து வாழ்ந்தால்.....அச்சமில்லை.எத்தனை வீரியம் பாரதியின் வரிகளில்...
".......நன்மையும் அறிவும்
எத்திசை தெனினும், யாவரே காட்டினும்
மற்றவை தழுவி வாழ்வீ ராயின்
அச்சமொன் றில்லை....."
- சுப்பிரமணியம் பாரதி.