கடந்த ஒரு வாரமாய் எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்த இம்சை தொடர்கிறது. போட்டிபோட்டுக் கொண்டு எல்லா ஊடகத்திலும் இதைப் பற்றிய விளம்பரங்களும், விவாதங்களும்தான். மேலொட்டமாய் பார்த்தால், இவர்கள் ஏதோ நல்லது செய்வதைப் போலத் தோன்றினாலும், அதன் அடியாழத்தில் கொச்சையான வர்த்தக நோக்கமும் , பாசாங்கும்தான் ஒளிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் இந்த சத்தங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. வருடம் தவறாமல் இத்தனை கூவுகிறார்களே, இந்த கூச்சல்களினால் சமூகத்தில் உருப்படியான மாற்றங்கள் ஏதும் நடந்திருக்கிறதா என்றால் எதுவுமில்லை. நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலத்தான் இருக்கிறது நிதர்சனம். நேற்று பிறந்த குழந்தையில் இருந்து நாளைக்கு கட்டையில் போகப் போகிற உயிர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலைதான் நீடிக்கிறது.
பிறகு என்ன கூந்தலுக்கு (இதை விட நாகரீகமான வார்த்தை இப்போதைக்கு நினைவில் வரவில்லை) இத்தனை ஆர்ப்பாட்டங்கள்.
நாளைக்கு சர்வதேச பெண்கள் தினமாம்.
ஒரு நாளைக்கு பெண்கள் தினம் கொண்டாடுவதை விடவும், பெண்களை தினமும் கொண்டாடுங்கள். உங்கள் வாழ்க்கை இனிதாகும். உலகம் அர்த்தமுள்ளதாகும்.
நான் கொண்டாட்ட ப்ரியன். :)
