Skip to main content

இஸ்லாம் - தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை....தொடர்ச்சி!

முந்தைய பதிவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வகைகளை பற்றிய அறிமுகத்துடன் , மஸலா வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை படித்திருப்பீர்கள். இந்த பதிவில் ”கிஸ்ஸா” வகை இலக்கியம் பற்றி நான் அறிந்தவைகளை தருகிறேன்.

‘கஸஸ்' என்கிற அரபிச்சொல்லின் நீட்சிதான் இந்த கிஸ்ஸா, 'கதை கேட்டல்' என்கிற அர்த்தம் தரும் சொல் இது. கதை கேட்பதென்பது மனித இனத்தின் மிக சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, இன்றைய நவீனங்களின் வளர்ச்சியில் கதை கேட்டலின் முறை மாறியிருந்தாலும், இந்த நுட்பத்தின் மீதான ஆவலும், ஆச்சர்யமும் மாறாது இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

இஸ்லாமிய வரலாற்று போக்கின் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவைதான் இந்த கிஸ்ஸா இலக்கிய வகை....கேட்போரை தன்பால் கட்டியிழுத்து, மார்க நெறிகளையும் அதன் மான்புகளையும் கேட்போர் மனதில் பொதிந்து வைக்க இவ்வகை இலக்கியங்கள் பயன் பட்டன என்றால் மிகையில்லை. முந்தைய மஸலா இலக்கிய வகையினை விட பெரிதும் விரும்பப்பட்ட இலக்கிய வகையாக இதை சொல்லலாம்.

கிஸ்ஸா வகை இலக்கியங்களுக்கு என தனியான தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. அவை செய்யுள் வடிவிலும், உரை நடையாகவும், இவையிரண்டும் கலந்தும் காணப்படுகின்றன. தமிழில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட கிஸ்ஸா இலக்கியங்கள் இருப்பதாக தெரிகிறது. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை அடிபப்டையாக கொண்டவையாகவும், மற்றவை வரலாற்று புனைவாக இஸ்லாத்தின் உயர் நெறிகளை முன்னிறுத்தும் வகையில் படைக்கப் பட்டிருக்கின்றன.

சில புகழ்பெற்ற கிஸ்ஸா இலக்கியங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

ஈசுபு நபி கிஸ்ஸா
அலி(ரலி) கிஸ்ஸா
இஸ்வத்தூர் நாச்சியார் கிஸ்ஸா
முகமது அனிபு கிஸ்ஸா
சைத்தூள் கிஸ்ஸா
ஷம்ஊன் கிஸ்ஸா
கபன் கள்ளன் கிஸ்ஸா

இவற்றுள் வடிவில் 'இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா' பெரியதாகவும், 'கபன் கள்ளன் கிஸ்ஸா' வடிவில் சிறிய கிஸ்ஸாவாக விளங்குகின்றன.


தமிழக முஸ்லீம்களிடையே மிகவும் புகழ் பெற்றதும், இலக்கிய செறிவு நிறைந்தது ஈசுபு நபி கிஸ்ஸாவாகும்..இதனை படைத்தவர் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையினை சேர்ந்த மதாறு சாஹிபு புலவராவார். இந்த நூல் ஹிஜ்ரி1170 ம் ஆண்டில் இயற்றப் பட்டதாக தெரிகிறது. இந்த நூல் யாக்கூபு நபியின் மகனாக பிறந்த ஈசுபு நபியின் வரலாற்றினை கூறுகிறது.


ஈசுபு நபி கிஸ்ஸாவிற்குப் பின்னர் பெரிதான வரவேற்பினை பெற்றது சைத்தூள் கிஸ்ஸாவாகும். இது ஒரு வரலாற்று புனைவிலக்கியம் எனலாம். இதில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது குறிப்பிட தக்கது. ஆனால் ஆச்சர்யகரமாய் இஸ்லாத்தின் புகழ் பெற்ற மாந்தர்களை பற்றிய குறிப்புகள் நூலின் நெடுகில் விரவியிருக்கின்றன.எளிய தமிழில் காணப்படும் இந்த நூலை இயற்றியவர் பேட்டை ஆம்பூரைச் சேர்ந்த அப்துல் காதர் சாஹிபு ஆவார்.


பதிவின் நீளம் கருதி இந்த அளவில் கிஸ்ஸா இலக்கியம் தொடர்பான தகவல்களை நிறைவு செய்கிறேன்....அடுத்த பதிவில் ”நாமா” வகை இலக்கியம் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

Popular posts from this blog

மதங்கள் என்ன செய்யும் !

மதங்கள் எதுவாக இருந்தாலும் அவை  இதைத்தான் செய்யும்.  சொல்லிவைத்தாற் போல அவை பிணங்களின் மீதே உயிர்த்தெழும். பிரிவினைகளில் உரம் பெறும். வெறுப்புகளே  அதன் வீரியம். ரத்தம் குடித்தே உயிர் வாழும். பெண்களை  போற்றாது, ஆனால் அங்கிருக்கும் பெண்கள் வரிந்து கட்டிக்க கொண்டு அதை போற்றுவார்கள். ஆனால்..... இந்த  மதங்களின் "அசட்டு" கடவுள்கள் மாய்ந்து மாய்ந்து அன்பை, சமத்துவத்தை, அறத்தை, அஹிம்சையை போதித்திருப்பார்கள் . அவற்றை இந்த மதங்கள் கண்டுகொள்வதும்  இல்லை, கவலைப்படுவதும் இல்லை. இதெல்லாம் தெரிந்தும் இந்த கடவுளர்களால் இன்று வரை மதங்களை எதுவும் செய்ய முடிவதில்லை. அதனாலேதான் அசட்டு கடவுள்கள் என்கிறேன். கொஞ்சம் கவனித்துப்பாருங்கள்  எந்த ஒரு கடவுளும் மதச்சண்டைகளில் தன்னுடைய ஆட்களை  காப்பாற்றியதாக வரலாறு இல்லை. அதாவது மதங்களுக்கும் தனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலத்தான் எல்லா கடவுளர்களும் இருக்கிறார்கள். இதை ஏனோ இந்த ஆவேச மதப்ரியர்கள்(எத்தனை நாளைக்குத்தான் மதவெறியர்கள் என்று எழுதுவது) புரிந்து கொள்வதில்லை.  சரி, இந்த கடவுளர்கள் தங்களுக்குள்ளாவது சண...

அழகரும் பின்னே ஞானும்ம்ம்ம்

நேற்று மாலை நான்கு மணி வரை மதுரைக்கு போகும் திட்டம் எதுவுமில்லை. ஒரு வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் அழகர் என்னை மிஸ் பண்ணப் போகிறார் என்றே நினைத்திருந்தேன். சூழ்நிலைகள் மற்றும் வேலைகளின் காரணமாய் இந்த திருவிழா எல்லாம் முடிந்த பின்னால் ஊருக்குப் போகலாமென என்னையே சமாதானம் செய்து கொண்டிருந்தேன். தம்பியும், தங்கையும் இதே சிங்காரச் சென்னையில் ஆளுக்கு ஒரு பகுதியில் செட்டிலாகி இருந்தாலும், நாங்கள் ஆடிக்கொரு தடவை, அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் நேரில் பார்த்துக் கொள்கிறோம். அவரவர் வேலையில் அவ்வளவு பிஸியாக இருக்கிறோமாம். ஆனால் இரண்டு நாளைக்கொரு தடவை ஃபோனில் ஷேம லாபங்களை விசாரித்துக் கொள்வதுண்டு. அந்த வகையில் நான்கு மணி வாக்கில் தம்பி போனில் அழைத்து, “சாமி பார்க்கப் போகலாமா” எனக் கேட்டான்.  அவன் பற்ற வைத்த அந்த பொறி பற்றிக் கொண்டு எரிந்ததில் ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய ARC Travels ன் ஏஸி பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். காலையில் நாலு மணிக்கெல்லாம் கொண்டு மதுரை கொண்டு சேர்த்து விடுவதாய் கூறினர். ஆனால் பேருந்து சென்னையை விட்டு வெளியே வந்த போது மணி ஒன்பதாகி இருந்தத...

2012

பத்துப் பதினைந்து வருடத்து முயற்சியில் ஒரு மலையுச்சிக்குப் போன மிதப்பில், கவனம் சிதறியோ அல்லது கால் இடறியோ தலை குப்புற விழுந்து, அந்த அடி தந்த காயத்தையும், அது தந்த வேதனையையும் உள் வாங்கி, நிதானித்து வலியோடு எழுந்து நின்றது 2011 என்றால், காயங்களை ஆற்றி மெல்ல இயல்புக்குத் திரும்பி மீண்டும் மலை உச்சியை நிமிர்ந்து பார்க்கவும், அதன் மீது மீண்டும் ஏறவும் தீர்மானித்தது 2012.  மெல்ல மெல்ல உயரம் போவது சாதனை, உயரத்தில் இருந்து தொபீரென கீழே விழுவது வேதனை....இரண்டையும் அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. இரண்டையும் பார்த்தாயிற்று.வெயிலின் அருமையை நிழலிலும், நிழலின் அருமையை வெயிலிலும் தெரிந்து கொண்ட வகையில் நான் பாக்கியவான்.  அந்த வகையில் இத்தோடு தொலைந்தான் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றத்தையும், அட அதற்குள் எழுந்து விட்டானே என்றவர்களுக்கு ஆச்சர்யத்தையும் தர முடிந்ததுதான் இந்த ஆண்டின் ஒரே சாதனை. புத்தாண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறேன் என இப்போது பட்டியலிடுவதை விடவும் , இந்த வருடத்தில் இதையெல்லாம் சாதித்திருக்கிறேனென  வருட முடிவில்  பதிவெழுதவே விரும்புகிற...